இந்திய மீனவர்கள் இருவர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் விடுதலை
வடக்கு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது படகொன்று விபத்திற்குள்ளாகிய நிலையில் கைதான இந்திய மீனவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம் யாழ்ப்பாணக் கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ய முற்பட்டபோது அவர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளாகியது.
சம்பவத்தில் கடலில் வீழ்ந்த மீனவர்களில் இருவர் கடற்படையினரால் மீட்கப்பட்டபோதிலும் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தார்.
மீட்கப்பட்ட மீனவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்றிருந்த நிலையில் அவர்களை விடுதலை செய்யுமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சில நாட்களில் குறித்த மீனவர்கள் இருவரும் இந்தியா திரும்புவர் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri