அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது
அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடா நாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள தனது ஆதனங்கள் சிலவற்றுக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்தவருக்கு தனது அற்றோனித் தத்துவத்தை வழங்கியுள்ளார்.
குறித்த நபர் தனக்கு அற்றோனித் தத்துவத்தில் வழங்கப்படாத அதிகாரத்தை பயன்படுத்தி மேலும் சில ஆதனங்களை மோசடியாக உரிம மாற்றம் செய்துள்ளார்.
யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார்
இது தொடர்பில் கனடாவை சேர்ந்த நபர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து இருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் நேற்று (16.10.2024) நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை பிணையில் செல்ல மன்று அனுமதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri