72 வயதில் இரண்டு தங்கப் பதக்கங்கள்: சாதனை படைத்த பெண் கௌரவிப்பு(Photos)
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ் போட்டியில் 72 வயதில் இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்த முல்லைத்தீவைச் சேர்ந்த பெண்ணை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்.சிறைச்சாலையின் ஏற்பாட்டில் இன்று(29) இடம்பெற்ற இந்த நிகழ்வின் ஆரம்பத்தில், சாதனை பெண் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் முன்பாக வைத்து யாழ். அரசாங்க அதிபர் மற்றும் உத்தியோகத்தரால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கௌரவிக்கும் நிகழ்வு
தொடர்ந்து மாவட்ட செயலகத்தின் முன்பாக இருந்து வாகன பேரணியில் சாதனைப் பெண் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இதன்போது யாழ்.சிறைச்சாலையில் வைத்து அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு - முள்ளியவளையைச், சேர்ந்த அகிலத்திருநாயகி அண்மையில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ் (National Masters & Seniors Athletics) போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை தனதாக்கியுள்ளார்.
இதேவேளை இவர் 1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும், 5000m விரைவு நடை ஆகிய போட்டிகளில் தங்கப் பதக்கங்களையும், 800m ஓட்டபோட்டியில் வெங்கலப் பதக்கத்தையும் தனதாக்கியுள்ளார்.
மேலும்72 வயதுடைய இவர் ஓய்வு பெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.





பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
சாணக்கிய நீதிப்படி கணவன் மனைவியிடம் மறைத்து வைக்க வேண்டிய 4 முக்கிய விடயங்கள்... என்னென்ன தெரியுமா? Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam