சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச்சென்ற சிறுமிகளால் குழப்பம்! பொலிஸார் கடும் எச்சரிக்கை
அக்குரஸ்ஸ வைத்தியசாலைக்கு அண்மித்த வீதியில் 02 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அக்குரஸ்ஸ சர்வோதய சுவசேத சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச்செல்லும் போது இந்த இரண்டு சிறுமிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அக்குரஸ்ஸ வைத்தியசாலையின் தாதி ஒருவர், இந்த இரண்டு சிறுமிகளும் சாலையில் பதற்றத்துடன் நடந்து செல்வதை அவதானித்துள்ளார்.
செவிலியரைப் பார்த்ததும் இரண்டு சிறுமிகளும் பிரதான வீதியில் நின்ற பேருந்தில் ஏறிச்சென்றுள்ளளனர்.
இதன்போது சிறுமிகளின் செயற்பாட்டில் சந்தேகமடைந்த தாதியர், அருகில் இருந்த முச்சக்கர வண்டியில் ஏறி, பேருந்தை துரத்திச்சென்ற போது, அக்குரஸ்ஸ பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளார்.

பொலிஸார் கடும் எச்சரிக்கை
இதன்போது 13 வயது சிறுமியிடம் அவர்களைப் பற்றிய தகவல்களைக் விசாரித்த போது மயங்கி விழுந்ததால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அக்குரஸ்ஸ சர்வோதய சுவசேத சிறுவர் இல்லத்தின் விடுதிக்கு பொறுப்பான இருவர் சிறுமிகள் காணாமற்போனமை தொடர்பில் பல மணித்தியாலங்களின் பின்னர் அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தள்ளனர்.
இதன்போதான நீண்ட விசாரணையின் பின்னர் வைத்தியசாலையில் இருந்த இரண்டு சிறுமிகளும் தமது விடுதியில் உள்ளவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சிறுவர் இல்லத்தின் விடுதி மேற்பார்வையாளர்கள் தமது கடமைகளை சரிவர செய்யாத காரணத்தினால் அவர்களை கடுமையாக எச்சரித்த பொலிஸார் பொறுப்பதிகாரி மருத்துவப் பரிசோதனையின் பின்னர் சிறுமிகளை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |