யாழில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுப்பட்ட இருவர் கைது
யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (07.03.2024) இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
சட்டவிரோத கடல் நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக வெற்றிலைக்கேணி கடற்படை வடமராட்சி கடற்பகுதியில் விசேட உலவு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில் நேற்று(07) ஆழியவளை கடற்பகுதியில் ஒளிபாய்ச்சி மூலம் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அதே பகுதியை சேர்ந்த இருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டதுடன் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் அவர்களது உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக தாளையடி நீரியல்வளத்திணைக்கள உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
