ஜெகதீஸ்ரனின் முயற்சியால் கொழும்பு - யாழிற்கு மேலதிகமாக இரண்டு புகையிரத சேவைகள்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மேலதிகமாக இரண்டு புகையிரத சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“நீண்டகாலமாக யாழ் - கொழும்பிற்கு ஒரேயொரு புகையிரத சேவை மட்டும் இடம்பெற்று வருவதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியிருந்தனர். இந்நிலையில் இது தொடர்பான பல்வேறு முறைப்பாடுகள் பொதுமக்களினால் என்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இரண்டு புகையிரத சேவைகள்
இந்நிலையில், இது தொடர்பாக ஆராய்ந்திருந்ததுடன், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
எனது வேண்டுகோளிற்கு அமைவாக 15ஆம் திகதியில் இருந்து ஒரு புகையிரத சேவையும், 31ஆம் திகதியில் இருந்து பிறிதொரு புகையிரத சேவையும் ஆரம்பிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |