உண்டியல் மற்றும் ஹவாலா முறைகள் தொடர்பில் ஹர்ஷ முன்வைத்துள்ள யோசனை
உண்டியல் முறை மற்றும் ஹவாலா முறை ஆகிய இரண்டும் இலங்கையில் சட்டவிரோதமானது அல்ல என பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.
இன்று (08) நாடாளுமன்றத்தில் பல பிரேரணைகளை முன்வைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியிடம் கோரிக்கை
இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், “ஹவாலா மற்றும் உண்டியல் முறைகள் நம் நாட்டில் சட்டவிரோதமானது அல்ல, ஆனால் அவை எந்த வகையிலும் கட்டுப்படுத்தப்படவில்லை.

எனவே, இந்த அமைப்புகளின் மூலம் சர்வதேச பரிவர்த்தனைகளை நடத்துபவர்கள் ஜூன் 2024 முதல் மே 2025 வரையிலான 12 மாத காலத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் முழுமையான மீளாய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழு, மத்திய வங்கியிடம் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த பிரேரணை அங்கீகரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam