இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள கோரிக்கை
நிர்ணயிக்கப்பட்ட விசா காலம் முடிவடைந்தால், சட்டவிரோதமாக தென் கொரியாவில் தங்க வேண்டாம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை வீசா காலம் நிறைவடைந்த பின்னரும் தென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள தொழிலாளர்களை, இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.
சட்ட நடவடிக்கைகள்
இவ்வாறு சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களின் தகவல்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தொழிலுக்காக செல்பவர்களின் செயற்பாடுகளின் காரணமாக இந்நாட்டிற்கு கிடைக்கும் வேலை ஒதுக்கீடு தீர்மானிக்கப்படும் என்பதால், சட்டவிரோதமாக தென் கொரியாவில் தங்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
you may like this

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
