ஆசிரியர் வெற்றிடங்கள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் சுமார் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் வெற்றிடங்கள்
இந்நிலையில்,ஆசிரியர்களால் இடமாற்றம் பெற முடியாத சூழல் உருவாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த வெற்றிடங்களுக்கு புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 நாட்கள் முன்
யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு! மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்
தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...