தரிந்து ரத்நாயக்கவின் அதிரடி ஆட்டம்! பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை

Sri Lanka Cricket Bangladesh Bangladesh Cricket Team Asian Games
By Shadhu Shanker Oct 03, 2026 07:16 AM GMT
Report

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்கள் கிரிக்கெட்டில் மூன்றாம் இடத்துக்கான போட்டியில், பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

தரிந்து ரத்நாயக்கவின் அதிரடி அரைச்சதத்தின் உதவியுடன், இலங்கை அணி பங்களாதேஷை 63 ஓட்டங்களால் வீழ்த்தி,வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

இலங்கை அணி

கொரோகி விளையாட்டு பூங்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 11ஆவது ஓவரில் 54 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும், தரிந்து ரத்நாயக்க மற்றும் சஹான் ஆரச்சிகே ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.

தரிந்து ரத்நாயக்க வெறும் 35 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 65 ஓட்டங்களை குவித்தார். அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய சஹான் ஆரச்சிகே 93 ஓட்டங்களைப் பெற்ற இணைப்பாட்டத்தில் முக்கிய பங்காற்றினார்.

மஹதி ஹசன் மற்றும் அலிஸ் அல் இஸ்லாம் ஆகியோரின் பந்துவீச்சில் இலங்கை அணி நான்காவது ஓவரில் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் அஷேன் பண்டார மற்றும் சஹான் ஆரச்சிகே இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை ஓரளவு உயர்த்தினர்.

எனினும், ரிஷாத் ஹொசைன் அஷேன் பண்டாரவை ஆட்டமிழக்கச் செய்ததையடுத்து, 11ஆவது ஓவரில் இலங்கை 54/5 என மீண்டும் நெருக்கடிக்குள்ளானது. இதன்போது களமிறங்கிய தரிந்து ரத்நாயக்க அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சஹான் ஆரச்சிகேவுடன் இணைந்து வெறும் 44 பந்துகளில் 93 ஓட்டங்களைப் பெற்றார். முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய ஓவரில் 25 ஓட்டங்களையும், ரிஷாத் ஹொசைன் வீசிய ஓவரில் 16 ஓட்டங்களையும் இலங்கை வீரர்கள் குவித்தனர்.

இறுதி 5 ஓவர்களில் மட்டும் 61 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை அணி 165/9 என்ற சவாலான இலக்கை பங்களாதேஷுக்கு நிர்ணயித்தது.

பங்களாதேஷ் அணி 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணிக்கும் ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

சைஃப் ஹசன், தன்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்ததால், மூன்றாவது ஓவரில் பங்களாதேஷ் 4/3 என தடுமாறியது.

தரிந்து ரத்நாயக்க தனது இரண்டாவது விக்கெட்டாக தௌஹித் ஹ்ரிடோயை ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் நான்காவது ஓவரில் பங்களாதேஷ் 18/4 என மேலும் பின்னடைந்தது. பர்வேஸ் ஹொசைன் மற்றும் யாசிர் அலி இணைந்து அணியை மீட்டெடுக்க முயன்றனர்.

எனினும், விஜயகாந்த் வியாஸ்காந்த் இந்த இணைப்பாட்டை முறியடித்தார். இதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் மீண்டும் விக்கெட்டுகளை இழந்தது. வெறும் 18 பந்துகளில் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்ததால், 50/5 என்ற நிலையிலிருந்த பங்களாதேஷ் 72/8 என சரிந்தது.

தரிந்து ரத்நாயக்கவின் அதிரடி ஆட்டம்! பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை | Sri Lanka Defeated Bangladesh To Win The Bronze

இறுதி வரை இலங்கை பந்துவீச்சாளர்கள் பங்களாதேஷ் அணிக்கு அழுத்தம் கொடுத்தனர்.

தரிந்து ரத்நாயக்க, நுவான் துஷார, விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் வனுஜ சஹான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தரிந்து ரத்நாயக்க 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், நுவான் துஷார 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், விஜயகாந்த் வியாஸ்காந்த் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், வனுஜ சஹான் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனால் பங்களாதேஷ் அணி 102 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை 63 ஓட்டங்களால் வெற்றி பெற்று, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்கள் கிரிக்கெட் பிரிவில் வெண்கலப் பதக்கத்தைத் தனதாக்கியது.

இந்தப் போட்டியில் பங்களாதேஷ் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US