கால்நடைகளை கடத்தி செல்ல முற்பட்ட பார ஊர்தி பொதுமக்களால் மடக்கி பிடிப்பு
முல்லைத்தீவில் (Mullaitivu) கால்நடைகளை கடத்தி செல்ல முற்பட்ட பார ஊர்தி ஒன்று பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம், நேற்று (07.01.2025) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு - மல்லாவி பகுதிகளிலிருந்து அதிக கால்நடைகள் அண்மைய காலங்களில் காணாமல் போவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
அனுமதி பத்திரம்
இந்த நிலையில் நேற்று மல்லாவி - கல்விளான் பகுதியிலிருந்து பார ஊர்தி ஒன்றில் கடத்தி செல்லப்பட்ட கால்நடைகளை, பிரதேச மக்கள் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்தியதோடு மல்லாவி பொலிஸாருக்கு தகவல்களை வழங்கியுள்ளனர்.

குறித்த பகுதிக்கு வருகை தந்த மல்லாவி பொலிஸார் கால்நடைகளை கொண்டு செல்வதற்கான அனுமதி பத்திரம் அவர்களிடம் இல்லாததினால் பாரவூர்த்தியை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றதுடன் வாகன சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri