மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரிகள் இருவர் கைது
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு பிரதேசத்தில் ஜஸ் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்றையதினம் (27.08.2023) இடம்பெற்றுள்ளது.
பாலமீன்மடு பிரதேசத்தில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வியாபாரத்துக்காக ஜஸ் போதை பொருளை எடுத்து வந்த 31 வயது மற்றும் 19 வயதுடைய இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
10, 15 மில்லிக்கிராம் போதை பொருள் மீட்கப்பட்ட நிலையில் 19 வயதுடையவர் பொலிஸாரை கண்டு ஜஸ் போதைப்பொருளை வாயில் போட்டு விழுங்கியதையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படட்ட மற்ற சந்தேகநபரை நாளை (27.08.2023)
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.