நாட்டில் இருவேறு பகுதிகளில் யானை தாக்கியதில் இருவர் பலி
அம்பாறை - மஹாஓயா, குருநாகல் - ஹதுன்கம ஆகிய பிரதேசங்களில் காட்டு யானைகள் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
அந்தவகையில் மஹாஓயா, பொரபொல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 82 வயதுடைய
முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர், யாக்கினிகல மலை பகுதிக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஹதுன்கம யானை தாக்குதல்
அதேவேளை ஹதுன்கம, ஹிம்பிலியாகட பகுதியில் காட்டு யானை தாக்கி 53 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர் அருகில் உள்ள வீட்டுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற அவர், வீடு திரும்பாத நிலையில் பிரதேசவாசிகள் மற்றும் வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின்போதே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





சீனா, ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி... துருக்கி உருவாக்கும் கொடிய ஆயுதம்: இந்தியாவிற்கு கெட்ட செய்தி News Lankasri

viral video: சிறுவனை கடித்து குதறிய பிட்புல் நாய்... சிரித்து ரசித்துக் கொண்டிருந்த உரிமையாளர்! Manithan
