நானுஓயாவில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
நுவரெலியா- நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(5.9.2026) இடம்பெற்றது.
நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயது உடைய இளைஞர் ஒருவரும் 23 வயது உடைய ஹப்புத்தளை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்புகள்
குறித்த இருவரும் நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து வெளியேறி கொத்மலை ஆற்றில் சங்கமிக்கும் நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி பகுதியில் குளிக்க சென்றபோதே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சடலங்களாக மீட்கப்பட்டுள்ளவர்கள் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த உயிரிழப்புகள் தொடர்பான விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
சிறைக்குள் கலவரம் உருவாக்கப்பட்டு நாமல் கொல்லப்படலாம்..! குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ள விடயம்
நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை