கிளிநொச்சியில் வாகனத்தில் நசியுண்ட ஒன்றரை வயது குழந்தை பரிதாப மரணம்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் வாகனத்தில் நசியுண்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
வீட்டு முற்றத்தில் நின்ற கப்ரக வாகனத்தை குழந்தையின் தாத்தா செலுத்திய நேரம் வாகனத்திற்குள் ஓடிச்சென்ற குழந்தை வாகன சில்லில் நசியுண்டு உயிரிழந்துள்ளது.
பொலிஸ் விசாரணை
குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ரூபன் அனாமிகா என்ற ஒன்றரை வயதுடைய குழந்தையே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசியாவில் தனியான தடயவியல் ஆய்வகம் இல்லாத நாடாக இலங்கை! சிறைச்சாலைகளில் உள்ள சிக்கல்நிலை - அஜித் பி பெரேரா தகவல்
நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை