பிரிந்து வாழ்ந்து வந்த கணவன், மனைவி வீடொன்றின் ஒரே அறையிலிருந்து சடலங்களாக மீட்பு
காலி - ஊரகஸ்மங்ஹந்திய, கொரகீன பகுதியிலிருந்த வீடொன்றிலிருந்து, பிரிந்து வாழ்ந்து வந்த கணவன் மற்றும் மனைவி சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொரகீன பகுதியில் வசித்துவந்த 39 வயதுடைய ஆணொருவரும், 38 வயதுடைய பெண்ணொருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
வீட்டின் அறையொன்றின் கட்டிலில் கையில் பூச்செண்டுடன் பெண்ணின் சடலம் காணப்பட்டுள்ளதுடன், அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் கணவன், மனைவி எனவும், இவர்கள் விவாகரத்து பெற்று சுமார் ஐந்து வருடங்கள் பிரிந்து வாழ்ந்து வந்துள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
