கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பை சேர்ந்த இருவர் கைது
சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்த இரண்டு பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு பகுதியில் வசிக்கும் 42 வயதான வணிகர்கள் எனக்கூறப்படும் இரு சந்தேகநபர்களும் நேற்று இரவு (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய சுங்க அதிகாரிகளால் விசாரணை
அறிவிப்பின்றி அவர்கள் சிகரெட் பொதியை நாட்டிற்குள் கொண்டு வந்து வெளியேற முயன்றபோது, சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 சூட்கேஸ்களில், 106,600 வெளிநாட்டு சிகரெட்டுகளைக் கொண்ட 533 அட்டைப் பெட்டிகள் இவ்வாறு நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த சிகரெட்டின் மதிப்பு சுமார் ரூ. 159,990,000 என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இரு சந்தேகநபர்களும் காவலில் வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.