யாழ். தென்மராட்சியில் கிளைமோர் குண்டுகள் மீட்பு
யாழ்ப்பாணம் - தென்மராட்சி பிரசேதத்தில் இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் - பன்றித்தலைச்சி அம்மன் கோயிலுக்கும் பொருளாதார மத்திய நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் வீதியில் இருந்து சுமார் 15 மீற்றர் தொலைவில் உள்ள வயல் பகுதியில் இருந்தே இரண்டு கிளைமோர் குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பழைய இரும்பு சேகரிக்கும் வியாபாரி

பழைய இரும்பு சேகரிக்கும் வியாபாரி ஒருவர் இதனைக் கண்டு வழங்கிய தகவலின் அடிப்படையில் சாவகச்சேரி பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதையடுத்து அந்தக் கிளைமோர் குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நீர்கொழும்பு சிறையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் பதற்றம் - அவசர விசாரணைக்காக விரையும் முக்கிய அதிகாரிகள்
நீர்கொழும்பு சிறை மோதல்: கைதிகளால் அடித்து நொருக்கப்பட்ட CCTV கமராக்கள் - தீவிரமடையும் சிஐடி விசாரணை
தமிழருக்கு சொந்தமான பாரிய பீச் ஹோட்டல் எரியூட்டப்பட்ட கொடூரம்! மைக்கேல் ராபர்ட்ஸ் என்பவரால் வெளியிட்டுள்ள தகவல்கள்
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam