யாழ். ஊர்காவற்றுறையில் கடைக்கு சென்ற சிறுமிகளுக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் (Jaffna) - ஊர்காவற்றுறையில் குளம் ஒன்றினுள் துவிச்சக்கர வண்டியுடன் விழுந்த இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (01.06.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
ஊர்காவற்துறை நாரந்தனை தெற்கு சூரியவத்தை பகுதியை சேர்ந்த நிரோசன் விதுசா (11) மற்றும் நிரஞ்சன் அனுஷ்கா (5) என்ற இரண்டு சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சடலம் கண்டுபிடிப்பு
வறிய குடும்பத்தைச் சேர்ந்த குறித்த இரு சிறுமிகளும் வீட்டில் இருந்து துவிச்சக்கர வண்டியில் கடைக்கு பால் வாங்க சென்றுள்ளனர்.
பால் வாங்க சென்ற இருவரையும் காணவில்லை என குடும்பத்தினர் தேடிய போது கடைக்கு சற்று தொலைவில் உள்ள குளத்திற்குள் இருவரும் சடலமாக காணப்பட்டுள்ளனர்.
குளத்தின் வரம்பு வழியாக துவிச்சக்கர வண்டியை செலுத்திய வேளை அருகில் இருந்த கல் தடக்கி, துவிச்சக்கர வண்டியுடன் தவறி குளத்துக்குள் விழுந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
பிரேத பரிசோதனை
இரு சிறுமிகளின் சடலங்களும் மீட்கப்பட்டு , ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரி நாகராஜா தியாகராஜா மற்றும் ஊர்காவற்றுறை பொலிஸார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு சிறுமி ஒருவர் கடந்த வருடம் விபத்தில் உயிரிழந்த நிலையில், தற்போது மற்றைய இரு சிறுமிகளும் உயிரிழந்தமை அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருவருது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
