கம்பளையில் காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு
கம்பளை (Gampola) கஹடபிட்டியவில் மொத்த வியாபார நிலையத்தில் பணியாற்றிய இளைஞன் ஒருவர் காணாமல் போன நிலையில் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பளை, கஹட்டா பிட்டிய, பகுதியைச் சேர்ந்த இருபத்தொரு வயதுடைய மொஹமட் ஹசன் ராஷிக் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக குறித்த கடையில் பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
முறைப்பாடு
இந்நிலையில், குறித்த பகுதியில் கடையின் மொத்த வியாபாரிக்கு சொந்தமான மற்றுமொரு களஞ்சியசாலை ஒன்றும் உள்ளதோடு அந்த மொத்த வியாபாரியிடம் மோசடி செய்ததாக கூறி உயிரிழந்த இளைஞரை கடையின் உரிமையாளரும் அவரது மகனும் பலருடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட நாளிலிருந்து இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில், மறுநாள் அவர் வீட்டிற்கு செல்லாததால் கடந்த 22ஆம் திகதி இளைஞனின் தாயார் நடந்த விடயங்களைக் கூறி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
எனினும் பொலிஸாரி்மிருந்து எந்த தகவலும் இல்லாததால் 25ஆம் தேதி மீண்டும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் விக்டோரியா நீர்தேக்கத்தில் இருந்து குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கம்பளையிலிருந்து விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு 40 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் உள்ள நிலையில் மகனுக்கு அங்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று இளைஞனின் உறவினர்கள் சம்பவம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Optical Illusion:'325' மற்றும் '235' என்ற இலக்கங்களுக்கிடையில் இருக்கும் வித்தியாச எண் என்ன? Manithan

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ Cineulagam

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri
