கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர்கள் இருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர்கள் இருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு கோடி ரூபா பெறுமதியான மடிக்கணினிகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களை வரி செலுத்தாமல் கொண்டு வந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு வர்த்தகர்களும் அனைத்து விமான நிலைய சோதனைகளையும் கடந்து இந்த பொருட்களை விமான நிலையத்திற்கு வெளியே எடுத்துச் செல்லும் போது, விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட விசேட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று அங்கு வந்து கைது செய்தனர்.
புலனாய்வு பிரிவினர்
இது தொடர்பில் புலனாய்வு பிரிவினர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த இரு தொழிலதிபர்களும் தங்களது பைகளில் மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களை மறைத்து வைக்காமல், விமான நிலைய சரக்குகளுக்கான வண்டிகளில் வைத்துக் கொண்டு விமான நிலையத்திற்கு வெளியே வந்ததாக விமான நிலைய பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
