ஹப்புத்தளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து : 6 பேர் வைத்தியசாலையில்
ஹப்புத்தளை - கிரவனாகம வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று(23.01.2026) இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து
குறித்த விபத்து, கிரவனாகம வீதியில் ஹல்தும்முல்ல, சொரகுனே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதுடன், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

விபத்தில் பேருந்துகளில் பயணித்த 6 பேர் காயமடைந்துள்ள நிலையில், சிகிச்சைக்காக ஹல்தும்முல்ல வைத்தியசாலை மற்றம் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 12 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan