மகாவலி ஆற்றில் நீராடச்சென்ற 5 இளைஞர்களில் இருவர் பலி
மகாவலி ஆற்றில் நீராடச்சென்ற 5 இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஐந்து இளைஞர்களும் நேற்று (25) மது அருந்திவிட்டு மகாவலி ஆற்றில் இறங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கண்டி-யக்கஹபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 5 இளைஞர்களே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டதுடன், மூவர் கற் பாறைகளில் தொங்கி உயிர் பிழைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இளைஞர்களை தேடும் நடவடிக்கை
மேலும், நீரில் அடித்துச் செல்லப்பட்டு, காணாமல்போன இருவரில் ஒருவர் தனஞ்சய இந்துவர வயது (22) எனவும்ஈ மற்றைய இளைஞன் யார் எனத் தெரியவில்லை என உயிர் தப்பிய மூன்று இளைஞர்களும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் ஒருவரின் தாயார் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பியுள்ளதாகவும் அவர் வழங்கிய வெளிநாட்டு மதுபான போத்தலை குடித்துவிட்டு இந்த இளைஞர்கள் நீருக்குள் இறங்கியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவ்வாறு நீரில் அடித்துச்செல்லப்பட்ட இரு இளைஞர்களை தேடும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam