ஈரானை தாக்க வேண்டாம்!! நெதன்யாகுவுக்கு ட்ரம்பின் அவசர செய்தி..
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு வர வேண்டும் என்றும், ஒரு ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீதான ஈரானின் இன்றைய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்..
“பேச்சுவார்த்தைகள் சுமூகமாக சென்று கொண்டிருந்தன. நாங்கள் உடன்பாடு ஒன்றுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தோம். வரும் வாரத்தின் திங்கள், செவ்வாய் அல்லது புதன் கிழமைக்குள் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நான் நம்பியிருந்தேன். ஆனால், இப்போது என்ன நடக்கிறது” எனவும் டொனால்ட் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “உங்களிடம் இருந்த ஏவுகணைகளைக் கொண்டு நீங்கள் தாக்குதல் நடத்திவிட்டீர்கள், அது போதும். இதனையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வந்த ஒரு ஒப்பந்தத்திற்குள் வாருங்கள்” எனவும் அவர் ஈரானிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன், தான் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைத் தொடர்பு கொண்டு, இஸ்ரேல் மீதான ஈரானின் இன்றைய தாக்குதலுக்கு பதிலடிக் கொடுக்க வேண்டாம் என்றும், பதிலுக்கு ஈரானைத் தாக்க வேண்டாம் என்றும் கூறப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, லெபனானின் பெய்ரூட் மீதான இஸ்ரேலின் கடந்த வாரத் தாக்குதலுடன் தான் உடன்படவில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது அதிருப்தியை இதன்போது வெளிப்படுத்தினார்.
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri