அவசர சிகிச்சைப் பிரிவில் சுரேஷ் சாலே! கொழும்பு தேசிய வைத்தியசாலையில் குவிந்துள்ள அதிரடிப்படையினர்
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறகு வைத்தியசாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இவ்வாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலை வளாகத்தில் அதிகளவான விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலத்த பாதுகாப்பு
இதற்கமைய, சுரேஷ் சாலேயின் பாதுகாப்பிற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்றும், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பல குழுக்களும் வைத்தியசாலைக்குள்ளும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சுரேஷ் சாலே தற்போது வரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தடுப்புக் காவலில் தனக்கு மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் செய்யப்படுவதாக குற்றம் சுமத்தி உணவு தவிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில், இன்று இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சுரேஷ் சாலே அனுமதிக்கப்பட்டார்.
இதன் காரணமாக, தேசிய வைத்தியசாலை மற்றும் அதனை அண்டிய சுற்றுப்புரங்களில் பாதுகாப்பு கடுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri