ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்காது! ட்ரம்பின் பகிரங்க அறிவிப்பு
ஈரான் அணு ஆயுதங்களை பெற்றுக்கொள்ளாது என்று ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பப்பட்ட Meet the Press நிகழ்ச்சியில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணு திட்டத்தை முறைப்படுத்தும் நோக்கில் முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்த சிக்கல்களை தீர்க்கும் நோக்கிலேயே ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை அமைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அணு ஆயுத கொள்முதல் தொடர்பான விதிமுறை
தொடர்ந்தும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிக்கையில்,
பேச்சுவார்த்தையின் போது, ஈரான் தரப்பு அணு ஆயுதங்களை வைத்திருக்க மாட்டோம் என்பதை ஏற்றுக் கொண்டனர். அந்த ஒப்பந்தத்தில், “நாங்கள் அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம்” என்ற விதி இருந்தது.
இதனால் பேச்சுவார்த்தையின் போது அனைவரும் இதனை மகிழ்ச்சியாகவே ஏற்றுக் கொண்டனர். எனினும், எனக்கு அப்படியில்லை. அதில் எனக்கொரு பிரச்சினை இருந்தது.
ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய மாட்டார்கள், ஆனால் அவர்கள் வேறு இடத்தில் இருந்து வாங்கிக் கொண்டால் என்னவாகும் என்று கேள்வி எழுப்பினேன்.
இதன் காரணமாக, அணு ஆயுத கொள்முதல் தொடர்பான விதிமுறைகளையும் ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.
ஈரானுக்கு, அணு ஆயுதங்களை உருவாக்கவும், கொள்முதல் செய்யவும் எந்த உரிமையும் இருக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri