மன்னாரில் 'டைனமைட்' வெடிப்பொருட்களுடன் இருவர் கைது (Photos)
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிமுனை கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி 'டைனமைட்' வெடிபொருட்களுடன் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் 200 'டைனமைட்' மற்றும் அதற்கு பயன்படும் 160 அடி நூல் மற்றும் பட்டா வாகனம் என்பனவற்றை நேற்று பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணை
மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் துல்சான் நாகாவத்த வின் பணிப்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகே வின் வழிகாட்டலில் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு தற்காலிக பொறுப்பதிகாரி உ.பொ.ப.ஜெயவர்த்தன பொ.சா . ரத்னமணல தலைமையிலான அணியினரே மேற்படி டைனமைட் வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் நாரம்பன பகுதியை சேர்ந்த 35, 54 வயதுடையவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணையின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri