யாழில் போதைபொருள் கொள்வனவுக்காக பணத்திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
வைத்தியர் ஒருவரின் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் பின் பகுதியை உடைத்து பணத்தினை திருடி சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் மாலை கலட்டி அம்மன் கோயில் தட்டாதெருவுக்கு அன்மையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் குறித்த நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதை மாத்திரைகள்
இந்த சம்பவம் அருகில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ள நிலையில், கமராவின் உதவியுடன் குறித்த இருவரையும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர், இன்று காலை அரசடி நல்லூர் பகுதியில் வைத்து கைது செய்தார்கள்.

அவர்கள் கைது செய்யப்படும் போது அவர்களிடம் 10 போதை மாத்திரைகளையும் 240 மில்லிகிராம் ஹெரோயினையும் தம்வசம் வைத்திருந்தனர்.
விசாரணைகளின் போது, அவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்றும் போதைக்காக சிறுசிறு திருட்டுகளில் ஈடுபட்டு வருபமையும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam