கொட்டகலையில் திடீர் சுற்றிவளைப்பு சோதனை
கொட்டகலை நகரில் சுகாதார நடைமுறைகளை மீறும் வகையிலான வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட உணவகம், சில்லறைக் கடைகள் மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
18 கடை உரிமையாளர்களுக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுகாதாரம் அற்ற முறையில் உணவகங்கள்
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பரிசோதர்களாலேயே இதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொட்டகலை நகருக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சுகாதார பாதுகாப்புடனான உணவுகள் மற்றும் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தால் திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அங்கு பிரதேச சபையிடம் வர்த்தக அனுமதி பத்திரம் பெறாமல், சுகாதாரம் அற்ற முறையில் உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை நடத்திவந்த 18 உரிமையாளர்கள் கண்டறியப்பட்டனர்.
அத்துடன், சுகாதார பாதுகாப்பற்ற பல உணவுப் பொருட்களும் இதன்போது அழிக்கப்பட்டன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 16 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam