யாழில் சுகாதார விதிமுறை மீறல்! ஆலய நிர்வாகிகள் கைது
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள், ஆலயத்தில் சுகாதார கட்டுப்பாட்டு விதிகளை மீறி தேர்த் திரு விழாவை நடத்திய குற்றச்சாட்டில் ஆலய தலைவர், செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுகாதார விதிமுறைகளை மீறி ஆலயத் திருவிழாவை நடத்தியதன் மூலம் யாழ்ப்பாணத்தில் கோவிட் வைரஸ் பரவலுக்கான ஏதுநிலையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு நாளைமறுதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவுள்ளது. அதனால் இருவருக்கும் இன்று இரவு பொலிஸ் பிணை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய வருடாந்த திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் நேற்றுமுன்தினம் தேர்த் திருவிழா இடம்பெற்றது. அதில் பெருமளவான மக்களம் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.