யாழில் நூதனமான முறையில் எரிவாயு சிலிண்டர்கள் திருடிய இருவர் கைது
யாழ்ப்பாண நகரில் கடந்த சில நாட்களாக நூதனமான முறையில் கடைகள் மற்றும் வீடுகளில் காஸ் சிலிண்டர்கள் திருடிய இருவர் யாழ்ப்பாண குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 10 ற்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றதடுப்பு பொலிஸ்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
போதைபொருளுக்கு அடிமையானவர்கள்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் போதைபொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் போதைப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவே எரிவாயு சிலிண்டர் திருடியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் பகுதியை சேந்தவர்கள் எனவும் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தின் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam

நிலாவின் அப்பா சோழனிடம் போட்ட சவால், குடும்பம் உடைந்துவிடுமா.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
