இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக பீடி இலைகளை கடத்த முற்பட்ட இருவர் கைது (Photos)
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக பீடி இலைகளைக் கொண்டுவரப்பட்டு வென்னப்புவ பகுதிக்கு கடத்த முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை புத்தளம் தழுவ பகுதியில் வைத்து தம்பபண்ணி கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தம்பபண்ணி கடற்படையினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம்- தழுவ கஜுவத்த கடற்கரைப் பகுதியில் பீடி இலைகளை வாகனங்களில் ஏற்றிக்கொண்டிருந்த வேளை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 40 உரைப் பைகளில் சுமார் 1236 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் நபரொருவரை கத்தியால் குத்தி படுகாயம் விளைவித்த வழக்கு: நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு
மேலதிக விசாரணை
அத்துடன் பீடி இலைகளைக் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கெப் ரக வாகனம், லொறி மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 85 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியென கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையகளென கடற்படையினர் கூறியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கெப் வாகனம், லொறி
மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மதுரங்குளி பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்பட்டுள்ளதாக தம்பபண்ணி கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் புத்தளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam
