கிளிநொச்சியில் கசிப்புடன் இருவர் கைது!
தர்மபுரம்- குமாரசாமிபுரத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(9) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குமாரசாமிபுரம் பகுதியில் அமைந்துள்ள வாய்க்கால் பகுதியில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.
கசிப்பு உற்பத்தி
இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், 80 லிட்டர் கசிப்பு என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 44 நிமிடங்கள் முன்
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan