யாழ்ப்பாணம் - கொடிகாமத்தில் இருவர் கைது
யாழ்ப்பாணம்(Jaffna) - கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெற்பேலிப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 4 டிப்பர் வாகனங்கள் கொடிகாமப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த கைது நடவடிக்கை இன்று(24.07.2024) காலை இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
விடத்தற்பளை - கெற்பேலிப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார் மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் மற்றைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா! அதிர்ச்சியிக் ரசிகர்கள் Manithan
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam