மிருகத்தை வேட்டையாடிய இருவர் கைது(Photos)
முல்லைத்தீவு-முள்ளியவளை பகுதியில் காட்டில் வாழும் மிருகத்தினை சட்டவிரோதமாக வேட்டையாடிய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உக்குளான் எனப்படும் மிருகத்தினை சட்டவிரோத துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய போது அவர்களை முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் முள்ளியவளை 3 ஆம் வாட்டாரப் பகுதியில் நேற்று (10.08.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
மக்கள் செறிந்து வாழும் குறித்த பகுதியில் பற்றைக்காட்டில் இருந்து சென்ற மிருகத்தினை சட்டவிரோத துப்பாக்கி கொண்டு சுட்டு வேட்டையாடியுள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது ஹிச்சிராபுரம் மற்றும் முறிப்பு பகுதியினை சேர்ந்த 30 வயதுடைய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட வேட்டையாடிய மிருகம் மற்றும் சட்டவிரோத துப்பாக்கி என்பனவற்றுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.