நுவரெலியாவில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான விமானம்! மீட்பு பணிகள் தீவிரம்
நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் (சீ பிளேன்) ஒன்றுவிபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று (07) பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த இரண்டு விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்வதற்காக வந்தபோதே விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளையும், ஏரியில் படகு சவாரி செய்துகொண்டிருந்தவர்கள் மீட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல்- திவாகரன்





தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri