இஷாரா செவ்வந்திக்கு உதவிய இருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நந்த குமார் தக்ஷி மற்றும் மற்றொரு சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்க உத்தரவ
90 நாள் விளக்கமறியல் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் கொழும்பு குற்றப்பிரிவு இன்று (07) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன் முன்னிலைபடுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சந்தேக நபர்களை ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவத்தில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச்சென்று, பின்னர் நேபாளத்திற்கு சென்று தலைமறைவாகியிருந்த போது கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam