காற்றழுத்த தாழ்வு மண்டலம் - யாழ்ப்பாணம் இதுவரை எதிர்கொள்ளாத பாதிப்பை சந்திக்குமென எச்சரிக்கை
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழில் 650 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதன் தாக்கம் காரணமாக யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (07.01.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
காற்றின் வேகம்
மேலும் தெரிவிக்கையில், உருவாகியுள்ள தாழ்வு மண்டலமானது, நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகர உள்ளது. இது மணிக்கு 9 கிலோமீற்றர் வேகத்தில் நகரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்றும் வீசுக்கூடும்.
குறிப்பாக 1970ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனவரி மாதத்தில் உருவாகியுள்ள 21ஆவது தாழ்வு மண்டலமாக அமைகின்றது. ஆனாலும் கடந்து சென்ற தாழ்வு மண்டலங்கள் விட இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதாவது இதன் நகர்வும் பாதை கடல் பகுதியாக இருந்தாலும் வடக்கு நோக்கி நகரும் போது தரையையும் ஊடறுத்துச் செல்லவுள்ளது. அத்துடன் மிக குறைந்தளவு வேகத்தில் நகர்வதால் எதிர்வரும் 8, 9, 10ஆம் திகதிகளில் கிழக்கு மாகாணம் பாரியளவு மழைவீழ்ச்சியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
தாக்கம்
அத்துடன் 9, 10 ஆம் திகதிகளில் யாழ். மாவட்டம் மிக அதிக மழைவீழ்ச்சியை எதிர்கொள்ள உள்ளது. இதன் தாக்கம் டிட்வா புயலால் தென்பகுதி எதிர்கொண்ட பேரழிவுகளை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்க முடிகிறது.
துறைசார் அதிகாரிகள் இது தொடர்பில் துரித முன்னேற்பாடுகளை முன்னெடுப்பது சிறந்தது. எனவே பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு எச்சரிக்கையை அவதானத்தில் கொண்டு தங்களது பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என அறிவுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri