வாகனேரி பிரதேசத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது
கசிப்பு காய்ச்சும் தொழிலில் ஈடுபட்ட நிலையில் இன்று வாகனேரி பிரதேசத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜயபெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை கடதாசி ஆலை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர்களுடன் வாழைச்சேனை பொலிஸாரும் இணைந்து கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் தட்டாவெளி அக்கரானை பகுதியில் நடாத்திய சோதனையின் போதே இந்த இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து கசிப்பு காய்ச்சுவதற்காக பயன்படுத்தக்கூடிய கோடா 420 லீற்றரும், ஸ்பிரிட் 20 லீற்றரும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 மற்றும் 20 வயதுடையவர்கள் என்றும், இவர்கள் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாகனேரி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.



பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri