கஞ்சா போதைப் பொருட்களுடன் இரண்டு இராணுவ வீரர்கள் கைது
திருகோணமலை மொரவெவ பிரதேசத்தில் கஞ்சா போதைப் பொருட்களுடன் இரண்டு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த இராணுவ வீரர்கள் பயணித்த முற்சக்கர வண்டியை சோதனையிட்டபோது கஞ்சா போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள் பன்குளம் இராணுவ முகாமில் கடமையாற்றி வருபவர்கள் எனவும் 25 மற்றும் 30 வயது உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த இருவரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





தலைவனா அவன், முட்டாள்... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர் Cineulagam

தேசிய விருது வாங்கிய ஜி.வி. பிரகாஷிற்கு, ஏ.ஆர். ரகுமான் கொடுத்த விலையுயர்ந்த பரிசு... போட்டோ இதோ Cineulagam
