இலங்கையில் இரண்டு அமெரிக்க பிரஜைகள் கைது: ஹோட்டல் அறையில் சிக்கிய பொருள்
இலங்கையில் இரண்டு அமெரிக்க பிரஜைகள் தேசிய வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த(11)ஆம் திகதி ஹார்டன் சமவெளி தேசிய பூங்காவில் உள்ள உலக முடிவு இயற்கை பாதையின் நுழைவாயிலில் சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்டுகின்றது.
விலங்குகளை பிடிக்கும் கருவிகள் கண்டுபிடிப்பு
வெளிநாட்டினரின் பொதிகளில் பூச்சி மாதிரிகள், இரசாயனங்கள் மற்றும் சிறிய விலங்குகளைப் பிடிக்கும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து அவர்கள் தங்கியிருந்த நுவரெலியாவில் உள்ள பிரபலமான சுற்றுலா ஹோட்டல் அறையை சோதனை செய்தபோது, நாட்டிற்கு மட்டுமே சொந்தமான பிற பூச்சிகளின் சுமார் 15 மாதிரிகள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து (12) ஆம் திகதி நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது வெளிநாட்டினரின் கடவுச்சீட்டுகளை காவலில் எடுக்கவும், அவர்களை தலா 1 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்கவும், வழக்கை 2026.01.26 அன்று மீண்டும் விசாரிக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

