அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்படும் பண்டிகை கால முற்பணத்தை 15,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக சுற்றறிக்கை வழிமுறைகளை வெளியிடுவதற்கு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பண்டிகை கால முற்பணம்
அரசாங்க அதிகாரிகளுக்கு பண்டிகை கால முற்பணங்களை செலுத்துவது தொடர்பான விதிகளின்படி,
தைப்பொங்கல், ரமலான், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நிகழ்வுகளுக்கும், புனித யாத்திரைகளுக்கும் (ஸ்ரீபாத யாத்திரை மற்றும் ஹஜ் யாத்திரை போன்றவை) அரச அதிகாரி ரூ.10,000/- முற்பணத்தைப் பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றினை வட்டி இல்லாமல் 08 மாதாந்திர தவணைகளில் அல்லது தேவைப்பட்டால் முன்னதாகவே மேற்படி முற்பணத் தொகையை வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் மேற்படி பண்டிகை கால முற்பணத் தொகையை ரூ.15,000/- ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டிருந்தமை குறிபிடத்தக்கது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan