கனடாவில் கொடூரமாக கொல்லப்பட்ட புலம்பெயர் சிறுமியின் வழக்கில் புதிய திருப்பம்!
கனடாவில் கொடூரமாக சுட்டுகொல்லப்பட்ட புலம்பெயர்ந்த சிறுமியின் வழக்கில் புதிய திருப்பமொன்று ஏற்பட்டுள்ளது.
ஜமைக்காவை சேர்ந்தவர் Taffash Riley எனும் (14) வயதுடைய புலம்பெயர்ந்த சிறுமியொருவர் கடந்த 1ஆம் திகதி சுட்டுகொல்லப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி தனது குடும்பத்தாருடன் கடந்த 2012ல் கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 1ஆம் திகதி இரவு 9 மணியளவில் Mississaugaவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் படிக்கட்டில் நடந்து வந்த போது மர்மமான முறையில் சுட்டுகொல்லப்பட்டார்.
இது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வந்த நிலையில், அதில் தொடர்புடைய 19 வயது இளைஞரான Michael Moncherry-Desir என்பவரை கைது செய்துள்ளனர்.
குறித்த வழக்கில் புதிய திருப்பமாக இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் தெரியும் என கூறப்பட்ட நிலையில், அதனை குடும்பத்தார் மறுத்துள்ளனர்.
குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றமைக்கான சூழ்நிலைகள் மற்றும் காரணங்கள் தெளிவாகாத நிலையில், தொடர் விசாரணைகள் நடைபெற்று வருகின்றதுடன், விரைவில் மர்மத்தின் முடிச்சுகள் அவிழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
