தவெக பின்னணியில் முக்கிய நபர் - பரபரப்புக்கு மத்தியில் அவசரமாக சந்திக்கும் விஜய்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் முடிவகளின் படி, 112 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளது. அதிமுக 65 தொகுதிகளிலும், திமுக 61 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை
பெரும்பாலான தொகுதிகளில் 10,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் எப்படி ஆட்சி அமைக்கலாம் என்பது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக வெற்றிக்கு அக்கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி முக்கிய நபராக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
தவெக வெற்றி வாய்ப்பு
2014 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2017 மும்பை மாநகராட்சித் தேர்தல்,2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்களில் சில அரசியல்வாதிகளுக்கு ஆலோசகராக பணியாற்றி வெற்றி வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் இந்த 2026 தேர்தலில் தவெகவுக்கு வியூக வகுப்பாளராக பணியாற்றியுள்ளதாகவும்,தவெக வெற்றிக்கு அக்கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது
இதனை தொடர்ந்து தெற்கு மண்டல இணை ஆணையர் சிபாஸ் கல்யாண் தலைமையில் துணை ஆணையர் கார்த்திகேயன், உதவி ஆணையர் பரத், போக்குவரத்து இணை ஆணையர் விஜயகுமார் ஆகியோர் தவெக தலைவர் விஜய் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.
மேலும் பனையூர் தவெக அலுவலகத்திற்கு தாம்பரம் பொலிஸ் ஆணையர் சஞ்சய்குமார் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! பெரும்பாலான அமைச்சர்கள் பெரும் பின்னடைவு
தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு
தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்