மருத்துவமனைக்கு செல்ல விஜய்க்கு அனுமதி மறுப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல்
நேற்றைய தினம் கரூரில் இடம்பெற்ற பரப்புரையில் பாதிக்கப்பட்டவர்களையும் உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்திக்கவும் தவெக கட்சியின் தலைவர் விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோர் உடனடியாக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பொலிஸார் அனுமதி மறுப்பு
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற, கரூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல விஜய் திட்டமிட்டு இருந்துள்ளார்.
இருப்பினும், அதற்கு அந்நாட்டு பொலிஸார் அனுமதி மறுத்ததாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன் காரணமாகவே, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை காண வைத்தியசாலைக்கு செல்ல முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தி இந்திய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



