6000 ரூபாவிற்கு விற்கப்படும் மஞ்சள் தூள்!
சந்தைகளில் தற்போது ஒரு கிலோ மஞ்சள் தூள் 6000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
இதனால் நுகர்வோர் தற்போது பெரும் அவல நிலையை எதிர்நோக்கியுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மக்கள் 50 மற்றும் 100 கிராமில் மஞ்சள் தூளை வாங்குகிறார்கள், அதன்படி அவர்கள் சுமார் 100 முதல் 600 ரூபாய் வரை செலவழிக்க வேண்டியுள்ளது.
சில நிறுவனங்கள் 20 கிராம் மஞ்சள் தூளை சுமார் 170 ரூபாவிற்கு விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், அரசு இதில் கவனம் செலுத்தி மக்களுக்கு குறைந்த விலையில் மஞ்சள் தூளை வழங்கு திட்டத்தை வகுக்க வேண்டும்” என அவர் கோரியுள்ளார்.

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
