துருக்கிக்கான இலங்கை தூதுவர் மக்களுக்கு வழங்கியுள்ள அவசர தகவல்
துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க மக்களிடம் அவசர கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அதன்படி துருக்கியில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் இருந்தால் தெரிவிக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
தகவல்களை சமர்ப்பிக்க வேண்டிய இடம்

அத்துடன் இவ்வாறான தகவல்களை இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு அல்லது துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
துருக்கி மற்றும் சிரியாவில் நேற்றைய தினம் பதிவான பாரிய நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
7.8 ரிக்டராக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரையில் 4000ஐ தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நூற்றாண்டில் துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவு இது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri