நூற்றாண்டின் பேரழிவு! 24 மணி நேரத்திற்குள் மூன்று நிலநடுக்கங்கள் - 4000ஐ தாண்டியுள்ள உயிரிழப்பு (video)
துருக்கி மற்றும் சிரியாவில் நேற்றைய தினம் பதிவான பாரிய நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
7.8 ரிக்டராக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரையில் 4000ஐ தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நூற்றாண்டில் துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவு இது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை பலி எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
24 மணி நேரத்திற்குள் மூன்று நிலநடுக்கங்கள்
இதன் காரணமாக பல கட்டடங்கள் சரிந்துள்ளதுடன், பல பகுதிகளில் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.
அடுத்தடுத்து 24 மணி நேரத்திற்குள் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தில் காயமடைந்த 15,000இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தை தேசிய பேரழிவாக அறிவித்த துருக்கி அரசாங்கம் 7 நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
