தாங்கமுடியாத பாரிய இழப்பு: துருக்கி - சிரியா நிலநடுக்கம் குறித்து ரவூப் ஹக்கீம் கவலை (Photos)
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தினால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டமை தாங்கமுடியாத பாரிய இழப்பு என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள துருக்கி தூதரகத்திற்கு நேற்றைய தினம் (09.02.2023) விஜயம் செய்தபோதே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த நினைவுப் பதிவேட்டில் தனது கருத்துகளை பதிவு செய்த பின்னர், ரவூப் ஹக்கீம் இலங்கைக்கான துருக்கி தூதுவர் ரகிபே டிமெட் செகெர்சியோக்லுவை சந்தித்து தனது கவலைகளை வெளியிட்டுள்ளார்.
மேலும், உறவுகள் மற்றும் உடைமைகளை இழந்த அங்குள்ள மக்களின் துயரங்களில் தாங்களும்
பங்கெடுத்துக் கொள்வதாகவும் ரகிபே டிமெட் செகெர்சியோக்லுவிடம் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





