அம்பாறையில் பிடிபடும் சூரை மீன்கள்... விண்ணை தொட்ட கடற்றொழிலாளர்களின் வருமானம்!
திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 வகையான பாரிய சூரை மீன்கள் மற்றும் வளையா மீன்கள் என கரைவலைகள் மூலம் பிடிக்கப்பட்டு பல இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு இன்றும்(06) காரைதீவு மற்றும் நிந்தவூர் பகுதிகளில் சூரை இன மீன்கள் அதிகளவாக கரைவலைகளுக்கு பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
நாள் வருமானம்
குறித்த சூரை மீன் ஒன்றின் பெறுமதி சுமார் 1300 ரூபா முதல் 1500 வரை விற்பனையாவதுடன் இதேவேளை இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களினால் ஒரு கடற்றொழிலாளரின் நாள் வருமானமாக 5 முதல் 6 இலட்சமாகவும் உள்ளது.

தற்போது கல்முனை பிராந்திய கடற்கரையில் கரை வலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடி தூண்டில் என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில், கரைவலை கடற்றொழிலாளர்களுக்கு இவ்வாறான பாரிய மீன்கள் தொகுதியாக பிடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri